Showing posts with label கால்பந்தாட்டம். Show all posts
Showing posts with label கால்பந்தாட்டம். Show all posts

11/20/09

நடுவருக்கு ஆப்புத ..

2010-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடக்கிறது. போட்டியை நடத்தும் தென்ஆப்பிரிக்கா நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடி தகுதி பெற்றுள்ளன.

பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் பிரான்ஸ்- அயர்லாந்து அணிகள் மோதிய தகுதி சுற்றில் ஆட்டம் சர்ச்சையில் முடிந்தது. பிரான்ஸ் வீரர் வில்லியம்ஸ் கல்லாஸ் அடித்த கோலால் சர்ச்சை ஏற்பட்டது. அந்த அணி கேப்டன் ஹென்றி கையால் பந்து பட்டு சென்றதைதான் வில்லியம்ஸ் கோல் அடித்தார். இதை நடுவர் கவணிக்க தவறிவிட்டார்.

ஹென்றி மோசடி செய்து விட்டதாக அயர்லாந்து ரசிகர்கள் கூச்சலிட்டனர். பந்து கையில் பட்டதை ஹென்றியும் ஒப்புக்கொண்டார். ஆனால் நான் நடுவர் இல்லை என்று அவர் கூறி இருக்கிறார்.

சர்ச்சைக்குரிய இந்த போட்டியின் முடிவால் அயர்லாந்து வாய்ப்பை இழந்தது. இதனால் இந்தப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று அயர்லாந்து வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அயர்லாந்து நாட்டு நிதி மந்திரி டெர்பனட் கூறும்போது நாங்கள் வெற்றி பெற வேண்டிய போட்டி “டிரா” ஆனது. எங்களை ஏமாற்றி விட்டனர் என்றார்.

இந்தப்போட்டியை மீண்டும் நடத்த கோரி அயர்லாந்து கால்பந்து சங்கம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை வலியுறுத்தியுள்ளது. அயர்லாந்தின் வேண்டுகோள் கடிதம் வந்துள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

என்ன கொடுமை சார் இது..... நடுவருக்கு ஆப்புத ...