Showing posts with label டென்னிஸ். Show all posts
Showing posts with label டென்னிஸ். Show all posts

11/27/09

சென்னை ஓபன் டென்னிஸ் ...

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மரின் சிலிக், வாவ்ரின்கா, சோடர்லிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் 15வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி ஸ்டேடியத்தில் (ஜன.4&10, 2010) நடக்க உள்ளது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மரின் சிலிக் (குரோஷியா), ராபின் சோடர்லிங் (சுவீடன்), வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து), ராஜீவ் ராம், கிம் கெவின் (அமெரிக்கா) டுடி செலா (இஸ்ரேல்) உட்பட 26 வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர் .

அடுத்த 3 ஆண்டுகள் இப்போட்டியை ஏர்&செல் நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. இந்த முறை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வீரர்கள் அதிக அளவில் பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, கடந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் நம்பர் 1 வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோர் இந்த முறையும் பங்கேற்க உள்ளனர் என்றார்.

நாடல் அதிர்ச்சி தோல்வி ??




லண்டனில் நடந்து வரும் ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
இப்போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்றுமுன்தினம் நடந்த ஆட்டத் தில், டென்னிஸ் உலகின் 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் அதிர்ச் சித் தோல்வி அடைந்தார். சுவீடனின் சோடர்லிங்கை எதிர்கொண்ட நடால் 46, 46 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார்.

11/23/09

பூபதி வெற்றி !



"ஏ.டி.பி., வேர்ல்டு டூர் பைனல்ஸ்" டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி வெற்றி பெற்றது. இதன் இரட்டையர் "ஏ' பிரிவு போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, செக் குடியரசின் பிரான்டிசக் செர்மாக், சுலோவாகியாவின் மைக்கேல் மெர்டினாக் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை பூபதி ஜோடி 6-3 என கைப்பற்றியது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பூபதி-நோவல்ஸ் ஜோடி இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தியது. இறுதியில் பூபதி ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் பூபதி ஜோடி, போலந்தின் பிரைஸ்டன்பர்க், மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடியை சந்திக்கிறது.

11/20/09

பெடரர்க்கே சவாலா ?

உலகின் "நம்பர்-1' வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்' டென்னிஸ் தொடரில் கடின சுற்றில் இடம் பெற்றுள்ளார்.

ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்' டென்னிஸ் தொடரில் உலகின் "டாப்-8' வீரர்கள் பங்கேற்கின்றனர் . இது வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்த எட்டு வீரர்கள் "ஏ', "பி' என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றில் மோதுவார்கள். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். இத்தொடரின் பைனல் வரும் 29ம் தேதி நடக்கிறது.

"ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், லீக் போட்டியில் அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் போட்ரோ, இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் பெர்ணான்டோ வெர்டஸ்கோ உள்ளிட்டோரை சந்திக்கிறார்.

ரோடிக் காயம் :
"பி' பிரிவில் இடம் பெற்றிருந்த அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகினார். இவருக்கு பதிலாக சுவீடனில் ராபின் சோடர்லிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பிரிவில் ஸ்பெயின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் டோகோவிச், ரஷ்யாவின் நிகோலே டேவிடென்கோ உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இத்தொடருக்கு முன் காயம் காரணமாக யாரேனும் விலக நேரிட்டால், பிரான்சின் ஜோ-வில்பிரிட் டோங்கா மாற்று வீரராக களமிறங்குவார்.