11/27/09

இத்தாலி வீரருக்கு தடை

இத்தாலியைச் சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரரான கியானி டா ரோஸ் (வயது23) லிக்குய்காஸ் அணிக்காக விளையாடி வந்தார். இவர் போட்டியின்போது ஊக்க மருந்து பயன்படுத்தியமையானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டார். உடனடியாக அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
கியானியிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையின் முடிவில் இத்தாலியின் ஒலிம்பிக் சபை, கியானிக்கு 20 ஆண்டுகள் தடைவிதித்தது. இவருடன் சேர்ந்து டாவைடு லூகாட்டோ என்ற வீரருக்கு 8 ஆண்டுகளும், அல்பனோ கொராஜின் என்பவருக்கு இரண்டு ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேபரியலி போசிசோ என்ற வீரர் தவறு செய்தமை நிரூபக்கப்படாமையால் அவர் விடு விக்கப்பட்டார்.

0 comments:

Post a Comment