
2010 ல் இந்தியாவில் நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட அர்ஜென்டினா அணி தகுதிபெற்றுள்ளது.இந்திய தலைநகர் டில்லியில், 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூன்று கட்டமாக நடத்தப்பட்டது. முதல் இரண்டு தகுதிச்சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
மூன்றாவது மற்றும் கடைசி தகுதிச்சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, அயர்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இதற்கான பைனலுக்கு அர்ஜென்டினா மற்றும் பெல்ஜியம் அணிகள் தகுதிபெற்றன. முக்கியமான பைனலில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. இதன்மூலம் உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறது.
உலக கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, கொரியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடுகின்றன.இத்தொடருக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
0 comments:
Post a Comment