11/20/09

பிரசன்னாவுக்கே தெரியலையாம் ......

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 72 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்தது.6-வது விக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே-பிரசன்னா ஜெயவர்த்தனே ஜோடி 351 குவித்து சாதனை படைத்தது.
இதற்கு முன்பு 1937-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பிராட்மேன்-பிங்கில்டன் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 346 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. 72 ஆண்டுகால சாதனையை அவர்கள் முறியடித்தனர்.

உலக சாதனையை முறியடித்தது பிரசன்னா ஜெயவர்த்தனேவுக்கு தெரியாதம் . இது பற்றி அவர் கூறியதாவது:-

எனக்கு சாதனை பற்றி எதுவும் தெரியாது. களத்தை விட்டு வெளியே வந்த போதுதான் அணியின் மேலாளர் உலக சாதனையை முறியடித்தது பற்றி என்னிடம் தெரிவித்தார். எனக்கு அப்போதுதான் சாதனையை முறியடித்தது தெரியும். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு பிரசன்னா ஜெயவர்த்தனே தெரிவித்தார். அவர் 154 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

0 comments:

Post a Comment