
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் கங்குலி தற்போது ரஞ்சிகோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளார். நேற்று மேற்குவங்க அணி, சவுராஸ்டிரா அணிக்கு எதிராக ஈடன்கார்டன் மைதானத்தில் மோதியது. போட்டி 9 மணிக்கு துவங்கிய நிலையில் கங்குலி வரவில்லை. முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் லேட்டாக வருவேன் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் மேற்குவங்க அணி கங்குலிக்கு மாற்று வீரராக ஜூகுன்வாலாவுடன் களமிறங்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் டின்டா காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்று வீரரை களமிறக்க நடுவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் 45 நிமிடங்கள் மேற்குவங்க அணி 10 வீரருடன் பீல்டிங் செய்தது. சுமார் 10.10 மணி அளவில் கங்குலி களமிறங்கினார்.






இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.30 ஆயிரம் ரன்களை எடுக்கும் முதலாவது வீரர் சச்சின் ஆவார். ஆமதாபாதில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் சச்சின் 35 ரன்களை எடுத்தபோது அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்கள் எடுத்தார்.1989-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் தற்போது கிரிக்கெட் வாழ்க்கையில் 21-ம் ஆண்டில் நுழைந்துள்ளார்.டெஸ்ட் போட்டிகள், ஒரு தின போட்டிகள், சர்வதேச டி20 போட்டிகள் என மூன்றிலும் சேர்த்து அவர் தற்போது 30,065 ரன்களைச் சேர்த்துள்ளார்.சச்சின் குவித்த ரன்கள் விவரம்:போட்டி ரன்கள் சதம் அரை சதம் சராசரிடெஸ்ட் 160 12,877 43 53 54.79ஒரு நாள் 436 17,178 45 91 44.50டி20 1 10 - - 10.00

