11/20/09

நம்ம ஆளு புட்டுகிச்சு !!!!!!

செய்னா நேவல் தோல்வி

சீன சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
சீன சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் ஷாங்காய் நகரில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் ஜிங்யுன் ஜியாவை எதிர்கொண்டார். முதல் செட்டை செய்னா 21-17 என கைப்பற்றினார். பின்னர் ஜிங்யுன் இரண்டாவது செட்டை 21-8 என தன்வசப்படுத்தி, பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் தொடர்ந்து அபாரமாக ஆடிய சீன வீராங்கனை 21-13 என கைப்பற்றினார். இறுதியில் செய்னா 21-17, 8-21, 13-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து, காலிறுதி வாய்ப்பை இழந்தார்.

0 comments:

Post a Comment